அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

Archive for May, 2010

உனக்காய்

பயணம் முள்ளில் என்றாலும்

பயணிப்பேன்

பயணங்கள் உனக்காய் என்றால்

சுமை மலை என்றாலும்

சுமந்திடுவேன்

சுமைகள் உனக்காய் என்றால்

கீறுவது இதயத்தை என்றாலும்

தாங்கிடுவேன்

வலிகள் உனக்காய் என்றால்

கேட்பது உயிர் என்றாலும்

ஈந்திடுவேன்

மரணம் உனக்காய் என்றால்

அவஸ்தை

இமைகளைப் பிரித்தாய்

சிறைப்பட்டேன்…!

புன்னகை பூக்களை உதிர்ந்தாய்

சுற்றும் மறந்தேன்…!

அன்னமாய் அசைந்து வந்தாய்

அசைவற்றேன்…!

இதழ்களை பிரித்தாய்

பேச்சற்றேன்…!

இத்தனை அவஸ்தைகளும்

போதாதென்றா இதயத்தையும்…!

களவாடிச் சென்றாய்…?

துடிக்கிறது

நாளை சந்திக்கலாம்!

என்றுதானே கூறிச்சென்றாய்…

ஆனால் ஏன்?

என் இதயம் மட்டும்…

உயிர் பிரிந்த உடலாய்!

துடிக்கிறது…!

அம்மா

உனக்காய் மடல் எழுத…

எடுத்தேன் எழுத்தாணியை அந்தியில்…

விழிகளும் பனித்தன…

இதயத்தின் ஓசையில்…

உன் அன்பை…

வரிகளாய் செதுக்க…

வார்த்தைகள் ஏனோ?

இன்னும் மொழியின் கருவறையில்…!

வைகறையும் ஆனது…

ஆனாலும் மடல் மட்டும்…

வெற்றுக் காகிதமாய்…

இறுதியாய் எழுதினேன்…

அன்பு அம்மாவிற்கு…

மகனின் அன்பான…

முத்தங்கள் என்று…

பயணச்சீட்டு

கேட்பாரற்ற அனாதையாய்!

அழுது புலம்புதடி!

குற்றுயிராய் துடிக்குதடி!

வீதியில்…!

நீ கசக்கி எறிந்த!

உன் பயணச்சீட்டு…!

பார்வை

எங்கே கற்றுக்கொண்டாய்!

பார்வையாலே…!

இதயத்தை இடமாற்றும்…!

அறுவை சிகிச்சையினை?

இயக்கமே

இயற்கையின் அதிசயமே!

பிரம்மனின் மிகச்சிறந்த கலைநயமே!

பிறையும் வளர மறந்ததடி!

உன் நெற்றியின் நினைவுகளினால்!

வண்ணத்துப்பூச்சியும் சிறகடிக்க மறந்ததடி!

உன் இமைகளின் படபடப்பினால்!

துள்ளி ஓடும் மான்களும் விழிமூட மறந்ததடி!

உன் இருவிழியின் அசைவினால்!

ரோஜா இதழ்கூட மலர மறந்ததடி!

உன் இதழ்களின் அழகினால்!

கானகுயிலும் பாட மறந்ததடி!

உன் குரலின் இனிமையினால்!

இயற்கையையே கட்டிப்போட்ட இனியவளே!

உனை ஓர் நொடியேனும் பிரிய நேர்ந்தாலும்

என் இதயமே இயங்க மறக்குமடி!

தனிமை

கடலோடு மையல் கொள்ள!

கதிரவனும் சென்றுவிட்டான்…

விண்ணோடு கொஞ்சி விளையாட!

மதியும் தோன்றிவிட்டாள்…

நானோ! தனிமையில்…

தனிமை கொடியது என்றார்கள்!

எவ்வளவு உண்மை!

உணர்கிறேன் இன்று முழுமையாய்…

மணலில் உன் பெயரை

எழுதியே ஓய்ந்து போனதடி

என் விரல்கள்!

நீ அருகில் இருப்பதாய்

எண்ணி எனக்குள்ளே பேசிய

வார்த்தைகள் மனதினை அழுத்த

உன் நினைவுகளால் துவண்ட

என் இதயமோ

பாரம் தாங்காமல் விம்மி துடிக்க!

விழியோரம் நீரும் இன்று புதிதாய்!!!

தோளோடு தோள் சாய்ந்து!

விழியோடு விழி கலந்து!

உயிர் நோக உனை அணைத்து!

மடிமீது என் தலை சாய்த்து!

அழ வேண்டுமடி

உயிர் வலி நீங்க!

ஏங்கி காத்திருக்கிறேன்!

உன் அருகாமைக்காய்…

பிச்சை

செவ்வானமும் பிச்சை கேட்குதடி!

உன் வெட்கத்தை…

தன் முகம் சிவக்க…!

துக்கம்

உனை பிரிந்த துக்கத்தில்

இரத்தம் எல்லாம் வற்றிப்போய்

காய்ந்த சருகாய் வீதியில்

இன்று…!

நீ வீசி எறிந்த

ஒற்றை ரோஜா!